திருப்பதியில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய ஹர்திக் பாண்டியா!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரரான ஹர்திக் பாண்டியா, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று தனது தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தி மொட்டை அடித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளார்.
தனது காதலி மஹிகா சர்மாவுடன் திருப்பதிக்கு ஆன்மீக விஜயம் மேற்கொண்ட ஹர்திக் பாண்டியா, பாரம்பரிய உடையில் கோவிலுக்கு வருகை தந்திருந்தார். இவர்கள் இருவரது புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சமீபகாலமாக அடிக்கடி ஏற்படும் காயங்கள் காரணமாக இந்திய அணியில் விளையாட முடியாமல் தவித்து வரும் ஹர்திக் பாண்டியா, தீவிரப் பயிற்சிகள் மூலம் மீண்டும் களமிறங்க முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.