உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வடக்கில் சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப நேர்முகத் தேர்வு.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
122 பார்வைகள்

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களில் வெற்றிடமாகக் காணப்படும் சுகாதாரப் பணி உதவியாளர் (தரம் III) பதவிக்கான 852 வெற்றிடங்களில், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதிக்கமைவாக 300 வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வுகள் நாளை மறுதினம் (03.08.2026) திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ப.ஜெயராணி தெரிவித்துள்ளார்.

கட்டமைக்கப்பட்ட இந்த நேர்முகத் தேர்வுகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை (03.08.2026) முதல் 21.08.2026 ஆம் திகதி வரை பண்ணையில் அமைந்துள்ள சுகாதார கிராமத்தில் நடைபெறவுள்ளன. இதற்கென ஆறு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், தினமும் மூன்று நேரப் பிரிவுகளாக இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதுவரை நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்கள் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 05.08.2026 இன் பின்னர் 021 222 0807 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்புகொண்டு, தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைச் சமர்ப்பித்து உரிய விவரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த 300 வெற்றிடங்களுக்காக சுமார் 3,548 விண்ணப்பதாரிகள் அழைக்கப்பட்டுள்ள நிலையில், எவ்வித அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல் அதியுயர் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேர்முகத் தேர்வுக் குழுவினருக்குக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இதில் எழுத்துப் பரீட்சை எதுவும் இடம்பெறவில்லை என்பதால், நேர்முகத் தேர்வில் வழங்கப்படும் ஒவ்வொரு புள்ளிக்கும் நியாயமான மற்றும் ஆதாரபூர்வமான காரணங்கள் இருக்க வேண்டும் எனவும், நியமிக்கப்பட்டுள்ள ஆறு குழுக்களும் எந்தவிதப் பாரபட்சமுமின்றி ஒரே மதிப்பீட்டு அளவுகோல்களையே பின்பற்ற வேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். நேர்முகத் தேர்வின்போது அரசியல், நிர்வாக அல்லது வெளிப்புறத் தலையீடுகளுக்குத் துளியளவும் இடமளிக்கக் கூடாது எனவும், முறைகேடு அல்லது அதிகாரத் துஷ்பிரயோகம் நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

51 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

27 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

49 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

71 0 0