உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
12 சனி

பணி நியமனம் இரத்து செய்யப்பட்ட சுகாதாரப் பணியாளர்களின் முழுத் தகவலையும் வழங்குக.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
91 பார்வைகள்

வடமாகாண சுகாதரப்பணி உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டு, பின்னர் அந்த நியமனங்கள் இரத்துச் செய்யப்பட்ட 389 பேரினதுமான தகவல்களை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் 1994ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டுவரை தொண்டர் அடிப்படையில் பணியாற்றிய 389 சுகாதாரப் பணியாளர்களுக்கு வடமாகாணத்தால் நடத்தப்பட்ட இரண்டு நேர்முகத் தேர்வுகளின் பின்னர் சுகாதார சேவை உதவிப் பணியாளர்கள் என்ற அடிப்படையில் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

அத்துடன், அன்றைய தினமே அவர்களை அவர்களது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் அறிக்கையிட்டு குறித்து ஒதுக்கிய சேவை நிலையங்களில் கடமைகளை ஆரம்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

நியமனத்தைப் பெற்ற 389 சுகாதாரப் பணியாளர்களும் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதியன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு அறிக்கையிடச் சென்றபோது அவர்கள் தற்போது பணியை ஆரம்பிக்க முடியாது என்றும், அந்த நியமனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது எனவும் வாய்மூலமாக அறிவிக்கப்பட்டது.

இதன்பின்னர், குறித்த நியமனம் திறைசேரியின் சுற்றறிக்கையின் அடிப்படையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன் குறித்த சுற்றறிக்கையானது மீளவும் திறைசேரியின் செயலாளரால் 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையால் இரத்துச் செய்யப்பட்டது.

இதையடுத்து தமக்கு நீதி கோரி குறித்த சுகாதாரப் பணியாளர்கள் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு கடந்த மாதம் 10ஆம் திகதியன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டபோது குறித்த மனுதாரர்களான சுகாதாரப் பணி உதவியாளர்கள் தங்களது நியமனத்துக்கான சட்டபூர்வமான உரித்துடையவர்கள் என்பதை முகத்தோற்றளவில் மன்று ஏற்றுக்கொண்டது. இதையடுத்து ஆட்சேபனைக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கடந்த 22ஆம் திகதி திகதியிடப்பட்டதுடன் நேற்று விவாதத்துக்கு அழைக்கப்பட்டிருந்தது.

நேற்று வழக்கு அழைக்கப்பட்டபோது மனுதாரர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராஜா, மரியதாஸ் யூட் டினேஸ் மற்றும் சட்டத்தரணி ஜோர்ஜ் இம்மானுவேல், சட்டத்தரணி ஜெயபாலசிங்கம் நிஷாந்தன் ஆகியோர் சட்டத்தரணி தியாகலிங்கம் டிலக்சனாவின் நெறிப்படுத்தலின் கீழ் முன்னிலையாகினார்கள். பிரதிவாதிகள் சார்பாக சிரேஷ்ட அரச சட்டத்தரணி நயோமி கஹவிட முன்னிலையாகியிருந்தார்.

அத்துடன் வடமாகாண சபையை பிரதிநிதித்துவம் செய்து மேலதிக செயலாளர் சுரேந்திரனும் மன்றில் தோன்றியிருந்தார். இதன்போதே, வடமாகாண சுகாதரப்பணி உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டு, பின்னர் அந்த நியமனங்கள் இரத்துச் செய்யப்பட்ட 389 பேரினதும் முழுமையான தகவல்களை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் எதிர்வரும் 24ஆம் திகதிக்கு வழக்குத் தவணையிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாதிபதியால் நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து…

97 0 0
இலங்கை செய்திகள்

எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது! : அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்!!

Photo – எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது!மொட்டுத் தரப்பினரின் போராட்டம் பயனளிக்காது!! தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ…

86 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விசேட செயற்குழுவின் காலம் நீடிப்பு! : எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எதிர்ப்பு!!

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்பதை ஆராய்ந்து யோசனை மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழுவின்…

110 0 0
இலங்கை செய்திகள்

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உலக சுற்றுலா தின விழா

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் எதிர்வரும்  25ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம் பெற உள்ள  உலக சுற்றுலா தின விழா…

91 0 0