உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

உணவகம் ஒன்றில் பாரிய தீ விபத்து.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
72 பார்வைகள்

சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பிரபல ‘பில் பில்’ (Fil Fil) உணவகத்தில் இன்று (01) திடீரென பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுமக்கள், சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் களப் பணியாளர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இத் தீ விபத்துக்கான பின்னணி மற்றும் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

தீயணைப்புப் பிரிவு மீது அதிருப்தி:
இதேவேளை, தீ விபத்து இடம்பெற்று அனைத்தும் எரிந்து சாம்பலான பின்னரே கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரின் இத்தகைய மந்தமான செயற்பாடு தொடர்கதையாகி வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பாரிய வர்த்தக நகரமாக விளங்கும் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதி மக்களின் பாதுகாப்பு கருதி, மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினை வினைத்திறன் மிக்கதாக மாற்றியமைக்க உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்களும் வர்த்தகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு
செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

35 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

58 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

51 0 0