உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஆபத்தில் சிக்கிய மீன்பிடிப் படகுகள் மற்றும் மீனவர்களை மீட்க அதிரடி நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
119 பார்வைகள்

நீர்கொழும்பு கடற்பகுதியில் ஆபத்தில் சிக்கியுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் மற்றும் மீனவர்கள் சிலரை மீட்பதற்காக, இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை கடற்படை இணைந்து கூட்டு நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியுள்ளன.

இந்த மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, உதவி புரிவதற்காக இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 412 (Bell 412) ரக ஹெலிகொப்டர் ஒன்றும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்துக்குள்ளான படகொன்றில் பயணித்த மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (31) பிற்பகல் மீன்பிடிக்கச் சென்ற டிங்கி படகு ஒன்று விபத்துக்குள்ளானதை, அவ்வழியாக சென்ற மற்றொரு படகு உறுதிப்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்டத் தேடுதலில், மேலும் 3 மீன்பிடிப் படகுகள் காணாமல்போயிருப்பது தெரியவந்தது.

விபத்துக்குள்ளான படகில் சென்ற மீனவர் ஒருவரின் சடலம் நீர்கொழும்பு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதே படகில் பயணித்த மேலும் இரண்டு மீனவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

காணாமல்போன மீனவர்களையும் படகுகளையும் மீட்கும் வகையில் கடற்படையின் ‘டோரா’ படகு விசேட மூழ்கிச் செல்லும் (Diving) பிரிவினருடன் களமிறக்கப்பட்டுள்ளது.

வான்வழியிலான தேடுதலுக்காக விமானப்படைக்குச் சொந்தமான ‘பெல் 412’ (Bell 412) ஹெலிகொப்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வான் மற்றும் கடல் வழிகளில் மீட்புக் குழுவினர் தொடர்ந்தும் தீவிர தேடுதல் வேட்டையை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு
செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

29 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

58 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

51 0 0