உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாவிதன்வெளி மத்திய குழு தெரிவு.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
65 பார்வைகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேசத்திற்கான புதிய மத்திய குழுவைத் தெரிவு செய்யும் விசேட நிகழ்வு நேற்று (31) நாவிதன்வெளியில் இடம்பெற்றது.

நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் லதீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கட்சியின் மாவட்ட செயற்குழு தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

மேலும், கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் உப தலைவரும் அக்கறைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ், அக்கறைப்பற்று மாநகர சபை உறுப்பினர் சபூர் ஆதம், நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எஸ். முஹம்மட் அலி ஜின்னா, கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளருமான ஜௌபர் உட்பட நாவிதன்வெளி பிரதேச சபை வேட்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, நாவிதன்வெளி பிரதேசத்திற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புதிய மத்திய குழு ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டது.

தலைவர்: ஏ.பி. சபூர் முகைதீன், செயலாளர்: எஸ். ஜபாத், பொருளாளர்: என்.எம். நிசாத், உப தலைவர்: ஏ.எம்.ஜே. ஹஸன், உப செயலாளர்: ஏ.எம். றிஸான், கொள்கை பரப்பு செயலாளர்: என்.எம். ஆசிக் இவர்களுடன் மேலும் 13 நிர்வாகக் குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டு, புதிய மத்திய குழு உத்தியோகபூர்வமாக அமைக்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர், “நாவிதன்வெளி பிரதேசத்தில் கட்சியின் அமைப்புக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் புதிய நிர்வாகம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலைத் தொடர்வதே கட்சியின் முதன்மை நோக்கமாகும்” எனக் குறிப்பிட்டார்.

நிகழ்வின் நிறைவில், தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதுடன், கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகளை ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுக்க அனைவரும் உறுதியளித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு
செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

35 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

58 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

51 0 0