உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

குளவிக் கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளி உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
57 பார்வைகள்

தோட்ட பணியில் ஈடுபட்ட போது குளவிக் கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளி உயிரிழந்துள்ளர்.

இன்று காலை 10 மணிக்கு லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் ரட்னகிரி தோட்டப் பகுதியில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி 70 வயதுடைய தோட்டத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 12 தோட்டத் தொழிலாளர்கள் லிந்துலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லிந்துள்ள பொலிஸார் தெரிவித்தனர்.

குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர் லிந்துலை லிந்துள்ள ரட்ணகிரி தோட்டத்தை சேர்ந்த முத்து நாராயணசாமி (வயது 70) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடலம் லிந்துள்ள மாவட்ட வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 203 ஆண்டுகளாக தோட்டங்களில் பணிபுரிந்து வரும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பலர் இவ்வாறான விபத்துகளில் சிக்கி மரணித்த போதும் தோட்ட நிர்வாகம் எந்த ஒரு இழப்பீடுகளையும் வழங்கியது இல்லை.

தற்போதைய அரசாங்கம் இதில் கவனம் செலுத்தி இவ்வாறான விதத்தில் மரணம் அடையும் தொழிலாளர்களுக்கு இழப்பீடுகளை பெற்று கொடுக்க முன்வர வேண்டும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

58 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

54 0 0
இலங்கை செய்திகள்

நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச மருத்துவ முகாம்

மன்னார் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக நானாட்டான் பிரதேச சபையினால் வளர்ப்பு நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை திட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) நானாட்டான்…

37 0 0
இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

58 0 0