உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்கள்; லொறிக்கு தீ வைத்த மூவர் கைது.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
131 பார்வைகள்

நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியில் இரு உந்துருளி ஓட்டுநர்கள் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கொள்கலன் லொறிக்கு தீவைத்து சேதம் விளைவித்தமை தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 20, 25 மற்றும் 26 ஆகிய வயதுடைய நீர்கொழும்பு, தாகொன்ன மற்றும் கிம்புலாபிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

அத்துடன், அப்பகுதியில் கைவிடப்பட்டிருந்த மற்றொரு உந்துருளியும் கண்டெடுக்கப்பட்டு பொலிஸ் காவிலில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியின் 2 ஆம் மற்றும் 3 ஆம் கட்டை இடைப்பட்ட போலவலாட்ட பகுதியில் கொள்கலன் லொறியுடன், நீர்கொழும்பு நோக்கி அதிவேகமாகப் பயணித்த இரு உந்துருளிகள் மோதியதில் இரு ஓட்டுநர்கள் உயிரிழந்தனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 20 வயதுடைய நீர்கொழும்பு, தாகொன்ன பகுதியைச் சேர்ந்த இருவராவர்.

சம்பவம் நடந்த இடத்தில் உள்ள CCTV காணொளிகள் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில், கொள்கலன் லொறிக்குச் சேதம் விளைவித்ததுடன் தொடர்புடைய அனைத்துச் சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

58 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

54 0 0
இலங்கை செய்திகள்

நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச மருத்துவ முகாம்

மன்னார் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக நானாட்டான் பிரதேச சபையினால் வளர்ப்பு நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை திட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) நானாட்டான்…

37 0 0
இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

59 0 0