உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நீதித்துறையை சொந்தப் பைகளுக்குள் போட்டுக்கொள்ள என்.பி.பி. அரசு முயற்சி.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
70 பார்வைகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது மற்றும் நீதித்துறை சுதந்திரத்தில் அரசு தலையிடுவது தொடர்பாக ‘ஜனநாயகத்துக்கான சமூக ஊடகவியலாளர்கள் சங்கம்’ தனது பலத்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அச்சங்கத்தின் இயக்குனர் அபீத எதிரிசிங்க, நாட்டின் தற்போதைய நீதித்துறை நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் அரசின் இந்தத் தீர்மானத்துக்கு ‘நீதிபதிகள் சேவை சங்கம்’ மற்றும் ‘இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்’ ஆகிய நாட்டின் பிரதான நீதித்துறை சார்ந்த இரு அமைப்புகளும் மிகத் தெளிவாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரேரணையில் நீதித்துறை சுதந்திரத்தையும் அரசமைப்பையும் பாதுகாக்குமாறு கோரப்பட்டுள்ளதோடு, நீதிபதிகள் சேவை சங்கத்தின் கூட்டத்தில் பங்கேற்ற 65 உறுப்பினர்களும் ஒருமனதாக இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் ஏகோபித்த குரலில் எதிர்த்த போதிலும், அரசு தனது அமைச்சரவையில் இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் பெற்றுத் தன்னிச்சையாக நிறைவேற்ற முயல்வது எதேச்சதிகாரமான போக்காகும்.

நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகளவில் நிலுவையில் உள்ளமையால்தான் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதாக அரசு கூறுவது முற்றிலும் ஏமாற்று வேலையாகும். ஏனெனில் அதிகளவிலான வழக்குகள் மேல் நீதிமன்றங்கள் மற்றும் நீதிவான் நீதிமன்றங்களிலேயே தேங்கியுள்ளன. மாறாக, அரசியல்வாதிகள் தொடர்புடைய வழக்குகளைப் பாதுகாக்கவும், நீதித்துறையைத் தங்கள் அரசியல் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரவுமே அரசு இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது.

நாடு எத்தகைய அரசியல் மற்றும் பொருளாதார இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்தபோதிலும், நீதித்துறை மற்றும் உச்சநீதிமன்றமே எப்போதும் நாட்டைப் பாதுகாத்து நின்றன. ஆனால், தற்போது அரசு தனது மக்கள் ஆணையைக் தவறாகப் பயன்படுத்தி, நீதிபதிகளையும் சட்டத்தரணிகளையும் ஒடுக்கி, நீதிமன்றத்தைச் சொந்தப் பைகளுக்குள் போட்டுக்கொள்ள முயல்கின்றது.

நீதிமன்றத்தின் நிலைமை இதே போக்கில் தொடர்ந்து, அரசின் இந்தத் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், எதிர்காலத்தில் நாட்டின் நீதித்துறைக்கு நினைவஞ்சலி செலுத்தி எள்ளும் தண்ணீரும் இறைக்க வேண்டிய பரிதாப நிலைமையே ஏற்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

58 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

54 0 0
இலங்கை செய்திகள்

நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச மருத்துவ முகாம்

மன்னார் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக நானாட்டான் பிரதேச சபையினால் வளர்ப்பு நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை திட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) நானாட்டான்…

37 0 0
இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

59 0 0