உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நெல் சந்தைப்படுத்தல் சபை இதுவரை மன்னாரில் நெல் கொள்வனவு மேற்கொள்ளவில்லை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
109 பார்வைகள்

வடக்கு மாகாணத்தில் நெற்கிண்ணம் (rice Paul area) என அழைக்கப்படும் மன்னார் மாவட்டத்தில் இதுவரை நெல் சந்தைப்படுத்தல் சபை நெல் கொள்வனவில் ஈடுபடவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

வட மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற பகுதிகளில் நெல் கொள்வனவில் ஈடுபடுகின்ற போதும் மன்னார் மாவட்டத்தில் இன்னும் நெல் கொள்வனவு நடைபெறவில்லை.

ஏனைய மாவட்டங்களில் 15 தொடக்கம் 20 இடங்களில் நெல் கொள்வனவு நடைபெறுகின்றன. மன்னார் மாவட்டத்தில் கடந்த கால போகத்தில் மூன்று இடங்களில் மாத்திரமே நெல் கொள்வனவு நடைபெற்றது.

அதிகமான நெல் உற்பத்தி உள்ள மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபை இவ்வாறான அநீதியான செயலில் ஈடுபடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக மடு பிரதேச செயலாளர் பிரிவு இலுப்பைக் கடவை பிரதேசம் போன்ற இடங்களில் நெல் கொள்வனவு நடைபெறுவதில்லை.

கடந்த கால போக நெல்லை விவசாயிகள் இன்னும் விற்பனை செய்யாமல் வைத்திருக்கின்றனர்.

மாவட்டத்தில் சிறுபோக அறுவடையும் பல பகுதிகளில் நடைபெறுகின்ற போதும் நெல் சந்தைப்படுத்தல் பிரிவு நெல்லை கொள்வனவு செய்யாததால் குறைந்த விலையில் தனியார் வியாபாரிகளிடம் விவசாயிகள் நெல்லை வழங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உரிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர் இந்த விடயத்தில் எது விதமான அக்கறையுமின்றி செயலாற்றுகின்றனர் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுத்து மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் நெல் கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபை முன் வரவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

42 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

73 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

59 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

77 0 0