உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

தேர்தலில் ‘மொட்டு’ தனித்தே போட்டியிடும்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
45 பார்வைகள்

எதிர்காலத்தில் தேசிய தேர்தல் ஒன்று இடம்பெறும் போது, ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது வேறு எந்தத் தேசியக் கட்சியுடனோ எந்தவிதக் கூட்டணியும் அமைக்கப் போவதில்லை எனவும், தனித்தே போட்டியிடுவோம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசில் பொலிஸ் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு என்பன அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடைப் பேச்சாளர்கள் இந்த அரச நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சட்டமா அதிபர் திணைக்களத்தை அரசியல் மயப்படுத்தவும் அரசு முயற்சிக்கின்றது.

சுயாதீன அரச நிறுவனங்களைக் கைப்பற்றி, அதன் ஊடாக அரச நிர்வாகக் கட்டமைப்பைத் தமக்கு ஏற்றவாறு செயற்படுத்த முனைவது முறையற்றது. ‘அரசைக் கைப்பற்றிவிட்டோம், ஆனால் அரச அதிகாரத்தை இன்னும் முழுமையாகக் கைப்பற்றவில்லை’ என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது இதன் வெளிப்பாடாகும்.

பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதியரசர்களின் சேவைக்காலத்தை நீடித்து, அவர்களைத் தன்பக்கம் ஈர்த்து நீதித்துறையின் பிரதான கட்டமைப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அரசு முயற்சிக்கின்றது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது நீதித்துறையைக் கட்டுப்படுத்தவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முயற்சிக்கவில்லை. நீதித்துறையின் சுயாதீனத்தை முன்னிலைப்படுத்தியே செயற்பட்டோம்.

நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த நாங்கள் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். இது அரசியலுக்கு அப்பாற்பட்டது. இதற்கமைவாகவே தற்போது சகல எதிர்க்கட்சிகளுடனும் ஒன்றிணைந்துள்ளோம். இதுவொரு அரசியல் கூட்டணியல்ல. ஏனெனில், ஒவ்வொரு கட்சிக்கும் இடையில் கொள்கை வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை வளர்ச்சி பெற்றுள்ளது என்று அறிக்கைகள் வெளியாகியுள்ளன. ஆனால், எவ்வாறான கருதுகோளுக்கு அமைய இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. இவ்வாறான அறிக்கைகள் மீது எங்களுக்கு நம்பிக்கை கிடையாது.

அரசின் மீதான மக்கள் நம்பிக்கையை அறிவதற்கு அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள் அறிக்கை வெளியிடத் தேவையில்லை. மாகாண சபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தினால், மக்கள் தமது சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்துவார்கள். அப்போது ஜனாதிபதி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் உண்மையான தரத்தை விளங்கிக் கொள்ளலாம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

132 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

115 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

112 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

120 0 0