உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
20 ஞாயிறு

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி சம்மாந்துறையிலும் கையெழுத்து வேட்டை!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
14 பார்வைகள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை செய்யக் கோரி சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடித் தீபமேந்தி விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

வளத்தாப்பிட்டி பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்நிகழ்வில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கைகளில் தீபங்களை ஏந்தி அனோஜனின் உயிரைக் காப்பாற்றவும், சவூதி அரசு அவருக்கு மன்னிப்பு வழங்கவும் மனமுருகிப் பிரார்த்தனை செய்தனர்.

அத்துடன், அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி இலங்கை அரசாங்கத்திற்கும் சவூதி தூதரகத்திற்கும் அனுப்பி வைப்பதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுள்ள அவசர மகஜரிலும் மக்கள் திரளாகக் கையொப்பமிட்டு வருகின்றனர்.

இதேவேளை, அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை நாட்டிற்கு மீட்டு வர வேண்டும் என வலியுறுத்தி கல்முனை, நற்பிட்டிமுனை உட்பட நாட்டின் பல்வேறு பாகங்களிலும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பதவியில் இருப்பவர்கள் நேர்மையுடன் சேவையாற்ற வேண்டும்! : வடக்கு ஆளுநர் வேதநாயகன் சுட்டிக்காட்டல்

“பதவி என்பது கதிரையில் இருப்பதற்காகக் கிடைப்பதல்ல, அது மக்களுக்கு உதவி செய்வதற்காகவே வழங்கப்படுகின்றது. பதவியில் இருப்பவர்கள் நூறு வீதம் நேர்மையுடன், எவ்வித பாகுபாடும் இன்றி மக்களுக்கு சேவை…

18 0 0
இலங்கை செய்திகள்

காணி கிடைக்கும் வரை எம் போராட்டம் தொடரும் : வலிகாமம் வடக்கு மக்கள் எச்சரிக்கை!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்தும் “மக்களின் காணி மக்களுக்கே” என்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கண்டித்தும், இராணுவத்தின் வசமுள்ள தமது சொந்தக் காணிகளை…

8 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில் முன்னெடுப்பு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன என்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த…

27 0 0
இலங்கை செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய அரபு அமீரகத்தின் இலங்கைக்கான தூதுவர் காலித் நசார் சுலைமான் அல்அமெரியைச் சந்தித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இந்தச்…

11 0 0