உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
20 ஞாயிறு

யாழில் உணர்வு ரீதியாக முன்னெடுக்கப்பட்ட கறுப்பு ஜுலை நினைவேந்தல்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
138 பார்வைகள்

1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட சிறைக் கைதிகளின் கறுப்பு ஜூலை நினைவேந்தல் இன்றையதினம் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் உணர்வு ரீதியாக முன்னெடுக்கப்பட்டது.

குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தலானது முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆரம்பத்தில் பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன. தொடர்ச்சியாக நினைவுரைகள் இடம்பெற்றன.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராஜா ரவிகரன், சிவஞானம் சிறீதரன், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் முருகையா கோமகன், வேலன் சுவாமிகள், ஜெபரட்ணம் அடிகளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன், படுகொலை செய்யப்பட்டோரது உறவுகள், தமிழ் தேசியம் சார் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி சம்மாந்துறையிலும் கையெழுத்து வேட்டை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை செய்யக் கோரி சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி…

13 0 0
இலங்கை செய்திகள்

காணி கிடைக்கும் வரை எம் போராட்டம் தொடரும் : வலிகாமம் வடக்கு மக்கள் எச்சரிக்கை!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்தும் “மக்களின் காணி மக்களுக்கே” என்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கண்டித்தும், இராணுவத்தின் வசமுள்ள தமது சொந்தக் காணிகளை…

8 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில் முன்னெடுப்பு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன என்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த…

27 0 0
இலங்கை செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய அரபு அமீரகத்தின் இலங்கைக்கான தூதுவர் காலித் நசார் சுலைமான் அல்அமெரியைச் சந்தித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இந்தச்…

11 0 0