உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

கோர விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசம்; பிரபல வர்த்தகரின் மகன் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
143 பார்வைகள்

திருகோணமலை – ஹபரணை வீதியின் கித்துள்ஊத்து, 147ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் 21 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இந்தியச் சுற்றுலாப் பயணி ஒருவர் காயமடைந்துள்ளார்.

திருகோணமலையிலிருந்து ஹபரணை நோக்கி இந்திய சுற்றுலா தம்பதியினர் பயணித்த வேன் ரக வாகனமும், ஹபரணையிலிருந்து கந்தளாய் நோக்கி அதிவேகத்தில் பயணித்த உயர்தர ரேசிங் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

மோதிய வேகத்தில் ரேசிங் மோட்டார் சைக்கிள் துண்டு துண்டாகச் சிதறி, சம்பவ இடத்திலேயே தீப்பற்றி முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான கந்தளாய் மற்றும் திருகோணமலை நகர்ப் பகுதிகளில் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் பிரபல வர்த்தகரின் மகனான ஹயஷான் பத்திரன (வயது 21) உடனடியாகக் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வேனில் பயணித்த இந்தியத் தம்பதியினரில் கணவர் காயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார். காயங்களின்றி தப்பிய அவரது மனைவி தங்கியிருந்த விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கல்லோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் வயோதிபப் பெண் கொ*லை.!

புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த…

36 0 0
இலங்கை செய்திகள்

அரசுக்கு 75 சதவீத மக்களின் ஆதரவு இருப்பின் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள்.!

“இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து பிற்போடுவதற்குத் திட்டமிட்டே செயற்பட்டு வருகின்றது. அதனாலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிக்க அமைக்கப்பட்ட…

23 0 0
இலங்கை செய்திகள்

ஊழலில் இருந்து தப்பவே பழைய அரசியல்வாதிகள் ஒரே மேடையில் ஒன்றிணைவு.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட வேண்டும். அனுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியின் போது எதிர்த்தரப்பினருக்கு எதிராக ‘அநுர திருடன்’ என்று…

41 0 0
இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

42 0 0