உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
24 வெள்ளி

டெங்கு சோதனையின் போது வீடொன்றில் இருந்து துப்பாக்கி கண்டுபிடிப்பு!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
73 பார்வைகள்

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, பெலவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனையொன்றின் போது, வீடொன்றிலிருந்து துப்பாக்கியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால், இராணுவம், விமானப்படை, இலங்கை பொலிஸ் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் நேற்று (22) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பெருமளவிலான நாய்கள் வளர்க்கப்படும், மிகவும் அசுத்தமான நிலையில் காணப்பட்ட வீடொன்றைச் சோதனையிட்ட போதே, அங்கிருந்து உயிருள்ள டெங்கு நுளம்புக் குடம்பிகள் மற்றும் குறித்த துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, பொலிஸாரால் குறித்த துப்பாக்கி பொறுப்பேற்கப்பட்டதுடன், வீட்டின் உரிமையாளரான பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிருள்ள நுளம்புக் குடம்பிகள் காணப்பட்ட மற்றுமொரு வீட்டைச் சோதனையிட்ட போது, அவ்வீட்டின் உரிமையாளர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால், இரு தரப்பினருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் நுளம்புக் குடம்பிகளுடன் வளாகங்களைப் பேணிய குற்றத்தின் கீழ், இந்த நடவடிக்கையின் போது இனங்காணப்பட்ட 13 நபர்களுக்கு எதிராகக் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை உடனடியாக அழித்து, டெங்கு ஒழிப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாட்டில் 9 மாவட்டங்களுக்கு அதிகூடிய வெப்ப எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக, 9 மாவட்டங்களில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (23) எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.…

87 0 0
இலங்கை செய்திகள்

எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு!

நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இது தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர்…

79 0 0
இலங்கை செய்திகள்

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி யாழ்ப்பாணத்துக்கு விஜயம்!

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு இன்று (23.07.2026) வியாழக்கிழமை உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர், பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் வடக்கு…

27 0 0
இலங்கை செய்திகள்

அநுருத்த பண்டாரவை கைது செய்தமை அடிப்படை உரிமை மீறல்! – தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2022 ஆம் ஆண்டு ‘அரகலய’ போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில், சமூகச் செயற்பாட்டாளர் அநுருத்த பண்டாரவைச் சட்டவிரோதமாகக் கைது செய்து தடுத்து வைத்தமையின் ஊடாக அவரது அடிப்படை உரிமைகள்…

33 0 0