உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
6 ஞாயிறு

செங்கடலில் பயணித்த சவூதியின் இரு வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
95 பார்வைகள்

செங்கடலில் பகுதியில் பயணித்த 2 சவூதி எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் உரிமை கோரியுள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணையைக் கட்டுப்படுத்தும் ஈரானின் முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில், செங்கடலில் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் இரண்டாவது தடையை ஏற்படுத்துவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வழிகாட்டலில் ஈரானின் மீது புதிய தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

அதன்படி தொடர்ந்தும் 12 வது நாளாகவும் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.

செங்கடலில் கப்பல் போக்குவரத்துக்கு விடுக்கப்பட்ட புதிய அச்சுறுத்தல்களுக்கு முன்பாகவே, ஈரானால் ஹோர்முஸ் நீரிணை முழுமையாக முற்றுகையிடப்பட்டமை உலகெங்கிலும் பணவீக்கத்தைத் தூண்டியது.

அத்துடன், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள காங்கிரஸ் தேர்தலுக்கு முன்னதாக, இந்தப் போர் ட்ரம்பின் குடியரசுக் கட்சியினரின் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது உலகளாவிய எண்ணெய் விலைகளிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

13 வயதில் செய்த சாதனை – பசியால் வாடும் குடும்பங்களுக்கு 25,000 பீட்சாக்களை வழங்கிய சிறுமி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 13 வயதான இந்திய வம்சாவளி சிறுமி ஒருவர் தனது சகோதரருடன் இணைந்து உருவாக்கிய செயலியின் மூலம், பசியால் வாடும் குடும்பங்களுக்கு 25,000-க்கும் மேற்பட்ட…

99 0 0
உலக செய்திகள்

பீஜிங்கில் சர்வதேச ஊடக மாநாடு; 90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்பு

சீன சர்வதேச செய்தித் தொடர்பாடல் மையத்தின் (China International Press Communication Center) 2026ஆம் ஆண்டிற்கான நிகழ்ச்சித்திட்டம் சீனாவின் பீஜிங் நகரில் நேற்று (4) ஆரம்பமானது. இம்முறை…

52 0 0
உலக செய்திகள்

கார்க் தீவு அருகே ஈரான் எண்ணெய் கப்பலை குறிவைத்த அமெரிக்கா!

ஈரானின் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் (Kharg) தீவுக்கு அருகில்…

78 0 0
உலக செய்திகள்

ஆப்பிரிக்காவின் புதிய உலக வரைபடம் 

ஆப்பிரிக்கக் கண்டத்தின் உண்மையான நிலப்பரப்பை மிகவும் துல்லியமாகப் பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட புதிய உலக வரைபடத்தைப் பயன்படுத்துவதற்கான பிரேரணை ஒன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.…

48 0 0