உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை அதிபரை மாற்றக் கோரி இரண்டாவது நாளாகவும் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
94 பார்வைகள்

அதிபரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து பாடசாலையைப் புறக்கணித்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முறையான தீர்வு கிடைக்கும் வரை பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பப் போவதில்லை என பெற்றோர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை அதிபரை மாற்றக் கோரி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையில், இன்றைய தினம் (23) பெற்றோர்கள் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பாது புறக்கணித்துள்ளனர்.

அதிபர் விவகாரம் தொடர்பில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வரும் சூழலில், இன்றைய தினம் (23) பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். அதன்படி, குறித்த பாடசாலைக்கு வெறும் 10 மாணவர்களே வருகை தந்திருந்தனர்.

தமக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்தும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப போவதில்லை என பெற்றோர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

இடம்பெற்றுவரும் இந்த விடயம் தொடர்பாக மன்னார் வலய கல்விப் பணிப்பாளரிடம் வினவிய போதுகுறித்த பாடசாலை அதிபர் விவகாரம் தொடர்பாக தொடர்ச்சியாகப் போராட்டங்கள் இடம்பெற்று வருவது எமது கவனத்திற்கு வந்துள்ளது.

இது குறித்துப் பாடசாலை சமூகத்தினர், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை இணைத்து விரைவில் ஒரு கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளோம்.

அதனைத் தொடர்ந்து, இது தொடர்பான முழுமையான அறிக்கை மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் மத்திய கல்வி அமைச்சுக்கு விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் தொடர்ந்து பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாது பெற்றோர் புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

39 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

35 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

27 0 0
இலங்கை செய்திகள்

தெஹிவளை தாக்குதல் பின்னணி பற்றி வார இறுதியில் உண்மை வெளிவரும்.!

கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர்…

26 0 0