உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் கைப்பந்து அணி தேசிய ரீதியில் சாதனை!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
35 பார்வைகள்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளில் ஒன்றான வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி 2026ம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கைப்பந்து போட்டியில் மூன்றாவது இடத்தை பெற்று மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கும் வவுனதீவு பிரதேசத்திற்கும் பெருமையினை தேடிக்கொடுத்துள்ளது.

இவ் வெற்றி சாதாரணமாக கிடைத்த ஒன்று அல்ல பல வருட பயிற்சி முயற்சியின் பின் பெறப்பட்ட ஒன்றே. அதிகஷ்ட பிரதேச பாடசாலையொன்றின் அணி தேசியத்திற்கு சென்று பல பிரபல்யமான பாடசாலைகளையெல்லாம் வீழ்த்தி இவ் வெற்றியை பெற்று பெருமையினை பெற்றுக்கொடுத்திருக்கின்றனர்.
அண்மையில் நடந்த திறந்த மட்ட போட்டிகளில் ஒன்றான கழகங்களுக்கிடையிலான தேசிய விளையாட்டு விழாவின் கிழக்கு மாகாண மட்டப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கைப்பந்து போட்டியில் விளையாடிய வவுனதீவு கிராம வீராங்கனைகள் சம்பியனாகி இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைத்திராத மகளிர் கைப்பந்தாட்ட சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொடுத்து புது வரலாற்றை எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது
அவர்கள் தேசிய மட்ட வெற்றி ஒன்றுக்காக கடந்த காலங்களில் கடந்து வந்த வெற்றிப் படிகளை சுருக்கமாக தருகிறேன்
2023 மாகாண மட்டம். முதலாமிடம்
2024 மாகாண மட்டம் முதலாமிடம்
2025 மாகாண மட்டம் முதலாமிடம்
2026 மாகாண மட்டம் முதலாமிடம்
2026 தேசிய மட்டம் மூன்றாமிடம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

“மாற்றம்” என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த அரசும் இனவாதப் போக்கிலிருந்து விலகவில்லை – சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!

சொந்த நாட்டிலும் தமிழர்கள் நசுக்கப்படுகிறார்கள்; வேலைவாய்ப்புக்காகச் சென்ற நாட்டிலும் நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். எங்களுக்கான உரிமைகளும் சுயநிர்ணய உரிமையும் உறுதிப்படுத்தப்படும் வரை, எங்கு சென்றாலும் நசுக்கப்படும் இனமாகவே நாம்…

24 0 0
இலங்கை செய்திகள்

தலைமன்னார் கடற்பகுதியில் விபத்திற்குள்ளான மீன்பிடிப் படகில் இருந்த இரு மீனவர்கள் மீட்பு

தலை மன்னார் வடக்கு கடல் பகுதியில் விபத்தில் சிக்கிய மீன்பிடிப் படகில் இருந்த இரண்டு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு…

21 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக சகல முயற்சிகளையும் மேற்கொள்வேன்! : சஜித் வாக்குறுதி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலைக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து முயற்சிகளையும் தான் உறுதியாக மேற்கொள்வேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ…

23 0 0
இலங்கை செய்திகள்

லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயி@ரிழப்பு!

லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயி@ரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று 11 மணி அளவில் இடம் பெற்றுள்ளது T.R.I செங் கூம்ஸ் தோட்டத்தை சேர்ந்த…

28 0 0