“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்விகளை எழுப்புவார்கள் என்றும், அதற்கு ஆளும் அரசு, அமைச்சர்கள், முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பதிலளிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.
ஆனால், தற்போது சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினால் ஆளுங்கட்சியினர் அதற்குப் பதிலளிக்க முடியாத நிலையில், பாடல்களைப் பாடுவதாக அவர் விமர்சித்தார்.
சட்டமன்றத்தில் இருக்கிறோமா அல்லது “சூப்பர் சிங்கர்”, “பாட்டு பாடவா” போன்ற நிகழ்ச்சிகளுக்கு வந்துவிட்டோமா என்ற சந்தேகம் ஏற்படுவதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
அமைச்சர்கள் பாடுவதாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் பாடுவதாகவும், சபாநாயகரும் பாடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், முதலமைச்சர் சட்டமன்றத்தில் “பஞ்ச் டயலொக்” பேசுவதாகவும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.
சட்டமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் இதுபோன்ற விமர்சனங்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.