உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலைக்கு முன்பாக போராட்டம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
77 பார்வைகள்

மன்னார் அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை கடந்த சில வருடங்களாக கல்வியிலும் பாடசாலை அபிவிருத்தியிலும் பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்து குறித்த பாடசாலையின் தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரி இன்றைய தினம் புதன்கிழமை (22) காலை பாடசாலைக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாணவர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் நலன் விரும்பிகள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஈடுபட்டனர்.

குறித்த அதிபர் தொடர்பாகவும் அவரை உடனடியாக மாற்றக் கோரி ஏற்கனவே போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் வருகை தந்த மன்னார் வலயக்கல்வி திணைக்கள அதிகாரிகள் துரித நடவடிக்கைகள் மேற்கொள்வதாக கூறிய போதும் இதுவரை எவ்வித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வில்லை எனவும், பல மாதங்கள் கடந்தும் அதிகாரிகள் குறித்த பாடசாலை விடயத்தில் அசமந்த போக்குடன் செயல்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே துரித கதியில் குறித்த பாடசாலையில் உள்ள தற்போதைய அதிபரை மாற்றி நிர்வாகத்திறன் உள்ள ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதோடு தற்போது பல மாணவர்கள் குறித்த பாடசாலையில் இருந்து இடை விலகி பிறிதொரு பாடசாலைக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த அதிபரை உடன் மாற்றி புதிய அதிபரை நியமிக்க மன்னார் வலயக்கல்வி திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்காது விட்டால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப போவதில்லை என பெற்றோர்கள் எச்சரித்துள்ளனர்.

இறுதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் வலயக்கல்வி திணைக்களத்திற்கு ஊர்வலமாக சென்று தமது கோரிக்கையை அதிகாரிகளிடம் முன் வைத்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

40 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

37 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

28 0 0
இலங்கை செய்திகள்

தெஹிவளை தாக்குதல் பின்னணி பற்றி வார இறுதியில் உண்மை வெளிவரும்.!

கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர்…

27 0 0