உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வலி மிகவும் அதிகமாக உள்ளது: இந்த வடு ஆற சிறிது காலம் எடுக்கும்!

133 பார்வைகள்

உலக கிண்ண கால்பந்து இறுதிப் போட்டித் தோல்விக்குப் பின்னர் லியோனல் மெஸ்ஸி ரசிகர்களுக்கு உருக்கமான செய்தியை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆர்ஜென்டினா அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸி ரசிகர்களுக்காக இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.

“வலி மிகவும் அதிகமாக உள்ளது, இந்த வடு ஆற சிறிது காலம் எடுக்கும்” என்று அவர் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமது குழுவின் உழைப்பு மற்றும் முயற்சியுடன் இணைந்து, உலகத்தின் சிறந்த அணிகளுக்கு மத்தியில் தமது அணியை மீண்டும் கொண்டு வந்து சேர்த்த, ஆர்ஜன்டீன நாட்டின் ஆதரவை தாம் எப்போதும் நினைவில் கொள்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று, நாம் சாதித்ததைப் பாராட்டுவது கடினமாக இருக்கலாம் ஆனால் ஆர்ஜன்டீன அணி உண்மையில் தொடர்ந்து இரண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளை எட்டியுள்ளது.

இந்தநிலையில் மீண்டும் ஒருமுறை ஒரு நாடாக ஒன்றிணைந்து, ஆர்ஜென்டினாவாக இருப்பதில் பெருமிதம் கொள்ள நம்மால் முடிகிறது என்றும் லியோனல் மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உலகக் கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் நாட்டிற்கு மெஸ்ஸி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

35 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

15 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

13 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

32 0 0