சுகீஷ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்.!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று புதன்கிழமை (23) சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளராகப் பணியாற்றிய காலத்திலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்த காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் திட்டப் பணிப்பாளராகப் பணியாற்றிய போதும், ஜனாதிபதிக்கான செலவினத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாக சுகீஷ்வர பண்டார மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.