உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
22 பார்வைகள்

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் வேகமாக அதிகரித்து வருவதால், நாளை திங்கட்கிழமை முதல் 11 மாவட்டங்களில் உள்ள 60 அதி அபாய வலயங்களை மையப்படுத்தி விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்துடன் இணைந்து இந்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட அதி அபாய வலயங்களின் எண்ணிக்கை தற்போது 175 ஆக உயர்ந்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 67 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தற்போது தினசரி பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

ஜூலை மாதத்தின் முதல் 10 நாள்களில் மட்டும் 11 ஆயிரத்து 764 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் (கடந்த ஜூன் மாதம் முழுவதிலும் 21 ஆயிரத்து 538 பேர் பதிவாகியிருந்தனர்).

இந்த வருடத்தில் இதுவரை 47 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

2017 ஆம் ஆண்டில் நாட்டில் ஆகக்கூடிய டெங்கு நோயாளர்கள் (ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 101 பேர்) பதிவாகியிருந்தனர். தற்போது நிலவும் பாதிப்பு விகிதம், மீண்டும் அந்த ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்கின்றது என்று சுகாதாரப் பிரிவினர் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருப்பதன் மூலமும், நுளம்பு பெருக்கத்தை ஒழிப்பதன் மூலமும் இந்தத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஒத்துழைக்குமாறு சுகாதாரப் பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; 200 பேரிடம் வாக்குமூலம் பதிவு.!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 200 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (14) செவ்வாய்க்கிழமை…

56 0 0
இலங்கை செய்திகள்

கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.!

நாடுபூராகவும் 1000 மில்லியன் ரூபாய் செலவில் 887 கிராமிய பாலங்கள் அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆரம்ப நிகழ்வாக இன்றையதினம் 107 கிராமிய பாலம்…

55 0 0
இலங்கை செய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வலைகள், படகுகள் வழங்கி வைப்பு.!

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகள் வழங்கி வைக்கப்பட்டன. நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலினால் கடற்றொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். படகுகள், வலைகள் அழிவடைந்தன.…

40 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருதில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை.!

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அடையாளம்…

28 0 0