உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

‘கே.பி.’யைப் பாதுகாக்கும் அநுர அரசாங்கம் இராணுவ அதிகாரிகளைப் பழிவாங்குவது ஏன்? – சம்பிக்க ரணவக்க சீற்றம்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
63 பார்வைகள்

விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்து நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாத்த இராணுவ உயர் அதிகாரிகள் இன்று அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகியுள்ளனர் என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார்.

குருநாகல் நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள் எவையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று சாடிய அவர், பொருளாதாரச் சுமைகள் அனைத்தும் நாட்டு மக்கள் மீதே திணிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தைத் தவிர, பொருளாதாரத்தை மீட்க இந்த அரசிடம் வேறு எவ்விதத் திட்டங்களும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலைச் சுட்டிக்காட்டிய அவர், நிர்வாகக் கட்டமைப்பின் பலவீனமே இதற்குப் பொறுப்பு என்றும், தார்மீகப் பொறுப்பேற்று நீதி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும்  வலியுறுத்தினார்.

“நாகரிகமான அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், கடந்த காலத்தை விமர்சிப்பதில் நேரத்தை வீணடிக்காமல் சிறந்த உதாரணங்களாகச் செயற்பட வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உட்பட்ட இராணுவ உயர் அதிகாரிகள் பழிவாங்கலுக்கு உள்ளாகியுள்ளனர் என்று  குறிப்பிட்ட பாட்டலி சம்பிக்க, பிரபாகரனுக்குப் பக்கபலமாக இருந்த ‘கே.பி’ எனப்படும் குமரன் பத்மநாதனைப் பாதுகாக்கும் அரசு, நாட்டைப் பாதுகாத்த இராணுவ அதிகாரிகளை இலக்கு வைப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.

தேசியத்தை முன்னிலைப்படுத்திச் செயற்படும் சகல தரப்பினரும், எதிர்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலச் சவால்களை வெற்றிகொள்ள வேண்டுமானால், அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து வலுவாகச் செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் அழைப்பு விடுத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

74 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

61 0 0