உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வைத்தியசாலையைச் சிறைச்சாலையாக மாற்றுவது சமூகத்துக்குப் பெரும் பாதிப்பு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
66 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, காலி மஹமோதர வைத்தியசாலையைச் சிறைச்சாலையாக மாற்ற அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அந்த அமைப்பின் தலைவரும் விசேட மருத்துவ நிபுணருமான மருத்துவர் சமல் சஞ்சீவ, இந்த வைத்தியசாலையைச் சிறைச்சாலையாக மாற்றுவது சமூகத்துக்கும் சூழலுக்கும் ஏற்புடையதல்ல என்று சுட்டிக்காட்டினார்.

மஹமோதர வைத்தியசாலையைச் சிறைச்சாலையாக மாற்றுவதற்குப் பதிலாக, அதனைச் சுற்றுலாப் பயணிகளுக்கான பிரத்தியேக வைத்தியசாலையாகவோ அல்லது டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்களுக்கான விசேட சிகிச்சை மையமாகவோ மாற்றுவதே தற்போதைய சூழலுக்குப் பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் அதிகரித்துள்ள நிலையில், தென் மாகாணத்திலுள்ள போதனா வைத்தியசாலைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் பாரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய நெருக்கடியான நிலையில், ஒரு வைத்தியசாலையைச் சிறைச்சாலையாக மாற்றுவது எதிர்காலத் தேவைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்” என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், இந்த வைத்தியசாலை பிரதான வீதிக்கு அருகிலும், கடற்கரைக்கு மிக அண்மையிலும் அமைந்துள்ளமையால், இதனைச் சிறைச்சாலையாக மாற்றாமல், கல்விப் பயிற்சி மையமாகவோ அல்லது சுற்றுலாத்துறை சார்ந்த வைத்தியசாலையாகவோ மாற்றுவது சுற்றுச்சூழலுக்கும் சமூகத்துக்கும் அதிக நன்மைகளைத் தரும் என்றும்  மருத்துவர் சமல் சஞ்சீவ மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

74 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

61 0 0