உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ஐக்கியமாகச் செயற்பட தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகள் இணக்கம்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
66 பார்வைகள்

இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பிரதான ஆறு கட்சிகள் தமது மக்கள் எதிர்நோக்கும் பொது விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கு இனங்கியுள்ளன.

அந்த இணக்கப்பாடு குறித்து அவை ஆறும் சேர்ந்து கூட்டாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நாளை திங்கட்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கொழும்பு – கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் நடைபெறுகின்றது.

இதில் அந்த ஆறு கட்சிகளினதும் தலைவர்களும் ஒரே மேசையிலிருந்து தங்கள் கூட்டுச் செயற்பாட்டுக்கான இணக்கப்பாட்டையும் அது தொடர்பான திட்டங்களையும் நாளை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு தமிழர்கள் தரப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி, மலையகத் தமிழர்கள் தரப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லிம்கள் தரப்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியனவே ஒன்றுபட்டுச் செயற்பட இணங்கியிருக்கின்றன.

பிரதான எதிரணிக் கூட்டில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் ஐக்கிய செயற்பாட்டுக்கு இணங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டு அமைப்புக்கு பெயர் ஏதும் உண்டா என்று கேட்ட போது –
”இப்போதைய நிலையில் இது ஒரு கூட்டு அமைப்பல்ல. ஒன்றுபட்டு விடயங்களை எதிர்கொள்வதற்கான இணக்கப்பாடு மட்டுமே. அதனால் அதற்கு விசேடமான பெயர் ஒன்றுமில்லை.” – என்று இந்த ஏற்பாட்டுக்குப் பின்னணியில் செயற்படும் கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

74 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

61 0 0