உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நாடாளுமன்றத்தில் பாதீடு சமர்ப்பிப்பதற்கான திகதி அறிவிப்பு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
80 பார்வைகள்

2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான கால அட்டவணையை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன் பிரகாரம், ஒவ்வொரு அமைச்சுக்குமான முன்மொழியப்பட்ட செலவின ஒதுக்கீடுகளைக் கொண்ட சட்டமூலத்தின் வரைவு, எதிர்வரும் செப்டெம்பர் 14 ஆம் திகதி அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

முக்கிய திகதிகள்

  • செப்டெம்பர் 18: ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அரச வர்த்தமானியில் வெளியிடப்படும்.
  • ஒக்டோபர் 7: நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்பு இடம்பெறும்.
  • நவம்பர் 12: நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு சமர்ப்பிக்கப்படும்.
  • நவம்பர் 13 முதல் 20 வரை: வரவு – செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெறும்.
  • நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 வரை: குழு நிலை விவாதங்கள் இடம்பெறும்.

நாட்டின் எதிர்வரும் ஆண்டுக்கான நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை உள்ளடக்கிய இந்த வரவு – செலவுத் திட்டத்தின் மீது அரசியல் மற்றும் பொதுத் தளத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

74 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

61 0 0