அகில இலங்கை கம்பன் கழகத்தின் திருவள்ளுவர் திருக்கோயில் திறந்து வைப்பு
அகில இலங்கை கம்பன் கழகத்தின் திருவள்ளுவர் திருக்கோயில் திறப்பு விழா இன்று கிளிநொச்சியிலுள்ள கம்பன் கழகத்தின் கம்பன் கலைக்கோயில் வளாகத்தில் இன்று12.07.2026 நடைபெற்றது.
கம்பவாதிரி இ.ஜெயராஜ் தலைமையில் நடைபபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு வி.ஜி.பி குழுமத்தைச்சேர்ந்தவரும் திருருவள்ளுவர் சிலையை அன்பளிப்பு செய்தவருமான கலைமாமணி டாக்டர் வி.ஜி.சந்தோசம் ,தமிழ்நாடு கோவிலூர் வேதாந்த மட குருமுதல்வர் சீர்வளர் சீர் நாராயண ஞான தேசிக சுவாமிகள், பம்பாய் திருக்குறள் தேனீ வி.மகாலிங்கம் மற்றும் முல்லத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கரைத்து பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் ஓய்வு நிலை பேராசிரியர்கள் ,கம்பன் கழக உறுப்பினர்கள் ,கம்பன் கழக ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.




