உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
13 திங்கள்

நீர்கொழும்பு சிறை மோதல் தொடர்பில் விசாரிக்க இருவேறு குழுக்கள் நியமனம்!

இலங்கை செய்திகள் 13 மணி நேரம் முன்
28 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை மோதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க ஊடகங்களிடம் தெரிவித்தார்.

சிறைச்சாலையில் ஏற்பட்ட சொத்துச் சேதங்கள் குறித்து விசாரிப்பதற்காக ஒரு விசேட குழுவும், மோதல் சம்பவம் குறித்து தனியானதொரு விசாரணையை முன்னெடுப்பதற்காகச் சிறைச்சாலைகள் திணைக்களத்தால் மற்றுமொரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட நடவடிக்கையாக, நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மேலும் 600 இற்கும் மேற்பட்ட கைதிகளை நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் ஒன்றை மையமாகக் கொண்டு கைதிகளின் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட இந்த வன்முறை மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த மோதலின் போது 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் என மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  ப

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

டெங்கு நோயைக் கட்டுப்படுத்தாது இனியும் வேடிக்கை பார்க்கப் போகிறீர்களா? – சுகாதார அமைச்சுக்கு மருத்துவர் சமல் சஞ்சீவ சாட்டையடி!

இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் பாரதூரமான டெங்கு ஆபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசும் சுகாதார அமைச்சும் துரித நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று மருத்துவ மற்றும் சிவில்…

12 0 0
இலங்கை செய்திகள்

ஜனாதிபதிக்கு எதிராகப் பிரேரணை கொண்டு வருவது மிகவும் அவசியம்!

அரசமைப்புத் திருத்தம் ஊடாகத் தற்போது பதவியில் உள்ள நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்க அரசு எடுக்கும் முயற்சி, நிறைவேற்றுத்துறையால் நீதித்துறையினருக்கு வழங்கப்படும் ‘இலஞ்சம்’ அல்லது ‘பரிசு’…

10 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேசசபை உறுப்பினர் கைது!

சட்டவிரோதமாகத் துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில், அம்பலாங்கொட பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அமித் சத்துரங்க சமரநாயக்க, காலி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால்…

10 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையின் சமையல் அறையில் இருந்து ஆயுதங்கள் மீட்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற பயங்கர மோதலைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் பெருமளவிலான கூர்மையான ஆயுதங்கள் மற்றும்…

14 0 0