கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் படலீய சந்திப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் ரதாவடுன்ன பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.
கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றுடனும் பாரவூர்தி ஒன்றுடனும் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்த விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.