உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு; சந்தேகநபர் கைது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
42 பார்வைகள்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவின் கீழ் வரும் ஃபேர்லோன் தேயிலை தோட்டத்தின் சின்ன சூரியகந்த பகுதியில் வசித்து வரும் 62 வயதுடைய நபர் நேற்று மீட்டியாகொட விவசாய நிலப் பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் நேற்று மாலை (06) கைது செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர், ஃபேர்லோன் தேயிலைத் தோட்டத்தின் சூரியகந்த பகுதியைச் சேர்ந்த (45) வயதுடையவர் ஆவார்.

வனவிலங்குகளால் ஏற்படும் சேதத்தைத் தடுப்பதற்காக, சந்தேக நபர் தனது வீட்டிலிருந்து அனுமதியின்றி காய்கறித் தோட்டத்திற்கு மின் இணைப்பு கொடுத்துள்ளார். மேலும், இறந்தவர் அனுமதியற்ற மின் கம்பிகளில் விழுந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர், சமிமலையில் உள்ள ஃபேர்லான் தேயிலைத் தோட்டத்தின் சூரியகந்த பகுதியில் வசித்து வந்த, ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளியும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான மரிமுத்து கந்தசாமி (62) ஆவார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வரும் மஸ்கெலியா பொலிஸ், சந்தேகநபரை இன்று ஹட்டன் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும், மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் சடலம் இன்று டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரி முன்நிலையில் உடற்கூற்று பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

30 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

51 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

51 0 0