உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம்; கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
29 பார்வைகள்

மன்னார் – மடுகல்வி வலயத்தில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைச் சீர்செய்வதற்குரிய, நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்கள் வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் இணையவழியில் பதிவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மடு வலயக்கல்விப் பணிப்பாளர், அவ்வாறு இணையவழியில் பதிவேற்றப்பட்டுள்ள பாடசாலைகளில் பாதிப்புக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் விரைவில் வழங்கப்படுமென வடமாகாண கல்வித்திணைக்களம் தமக்கு அறிவித்தல் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
டித்வா புயலால் மடு கல்வி வலயத்தின், மாந்தை மேற்கு கல்விக் கோட்டத்திலுள்ள 09 பாடசாலைகளில் பாடசாலைப் பொருட்கள் பாதிப்படைந்திருப்பதுடன், 25 பாடசாலைகளில் பாடசாலைக் கட்டுமானங்கள் பாதிப்படைந்திருப்பதாகவும் அறியமுடிகின்றது.

இவ்வாறு டித்வா புயலால் பாதிப்புக்குள்ளான இந்தப் பாடசாலைகளை சீர்செய்வதற்குரிய நிதிகளைப் பெறுவதில் ஏன் தாமதம் ஏற்படுகின்றது.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட அந்தப் பாடசாலைகளின் விபரங்கள் உரிய வகையில் அனுப்பப்பட்டதா? அல்லது, தரவுகளை உரியவகையில் அனுப்பவதில் தாமதங்கள் ஏற்பட்டதா? அந்த நிதிகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டமைக்கான காரணம் என்ன? இது தொடர்பில் உரியவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் – என்றார்.

இதன்போது மடு வலயக்கல்வி பணிப்பாளர் பதிலளிக்கையில்,
டித்வா புயலினால் ஏற்பட்ட தாக்கம் தொடர்பாக நாம் மன்னார் மாவட்ட செயலருக்கும், வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கும் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

மாகாண கல்வித் திணைக்களம் எம்மால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் பாதிப்பு விபரங்களை இணையவழியில் பதிவேற்றியுள்ளனர். இவ்வாறு இணையவழியில் பதிவேற்றப்பட்ட அனைத்துப் பாதிப்புக்களுக்குமான நிதி ஒதுக்கீடுகள் விரைவில் கிடைக்கபெறுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளருடன் இடம்பெற்ற கூட்டத்திலும் டித்வா புயல் பாதிப்புக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறுமென்றே தெரிவிக்கப்பட்டுள்ளது – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

30 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

51 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

51 0 0