உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 50 நிமிடங்கள் முன்
57 பார்வைகள்

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்தார்.

இந்திய மற்றும் சீன எல்லைப் பகுதிக்கு அருகில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பனி மற்றும் பாறைகள் சரிந்து த்ரிசூலி ஆற்றில் விழுந்ததால் இந்த பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பலரும் அடித்துச் செல்லப்பட்டு பெருமளவிலான சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

இத்தகைய இயற்கை பேரழிவுகள் உலகளவில் புதிதல்ல எனக் குறிப்பிட்ட அவர், 1980 களில் கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சேற்றுச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிகழ்வை நினைவுகூர்ந்தார்.

இலங்கையிலும் இத்தகைய ஆபத்துகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என எச்சரித்த அவர், டித்வா சூறாவளி காலத்தில் சரசவிகம பகுதியில் நிலச்சரிவு காரணமாக நீர் செல்லும் வாய்க்கால்கள் அடைபட்டு, பின்னர் சேற்றுடன் கூடிய வெள்ளம் கிராமத்திற்குள் பாய்ந்ததால் 20 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் தளர்வான பாறை அடுக்குகள் கொண்ட மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் போது, அருகில் உள்ள ஆறுகள் அல்லது ஓடைகள் அடைபட்டு, பின்னர் நீர் தேங்கி திடீரென உடைந்து பெருக்கெடுக்கும் போது பெரும் வெள்ளப்பெருக்கும் பேரழிவும் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, எதிர்காலத்தில் இவ்வாறான பேரழிவுகளிலிருந்து தப்பிக்க சாதாரண நிலச்சரிவு மண்டலங்களை மட்டும் வரைபடமாக்குவது போதாது என்றும், நிலச்சரிவால் ஆறுகள் அடைபட்டு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுள்ள அபாயகரமான பகுதிகளைக் கண்டறிந்து வரைபடமாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இத்தகைய முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் மூலம் எதிர்காலத்தில் சரசவிகம போன்ற பேரழிவுகளைத் தடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

47 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

53 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

53 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

51 0 0