உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

யாழ். அரச அதிபருடன் யாழ்ப்பாண உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிராந்திய ஆணையாளர் சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
38 பார்வைகள்

யாழ்ப்பாணம் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய ஆணையாளர் திரு. A. P. குணதுங்ஹ, அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபனை நேற்றைய தினம் (06.07.2026) அரசாங்க அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற்றுக்கொள்வதற்காக அண்மைய நாட்களாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்பது தொடர்பாக அரசாங்க அதிபர் தம்முடன் தொலைபேசியில் கலந்துரையாடி பொதுமக்களுக்கான உரிய அறிவுறுத்தல்களை வழங்கியமைக்காக தமது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.

இக் கலந்துரையாடலில் பின்வரும் மேலதிக விபரங்களை யாழ்ப்பாண பிராந்திய ஆணையாளர் தெரியப்படுத்தினார்.

2023 ஆம் ஆண்டு வைகாசி 31 ஆம் திகதிய 2334/21 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 01/01/2024 முதல் கட்டாயமாக வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தினை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவுசெய்து பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் 2026 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரித்திருத்தச்சட்டத்துக்கு அமைவாக 01/04/2026 முதல்
வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பின்வரும் விடயங்களுக்கு அத்தியாவசியமானது எனத் தெரிவித்தார்.

1.வங்கிக் கணக்கைத் திறப்பதற்கு
2.கட்டடத் திட்டத்திற்கான ஒப்புதலைப் பெற்றுக்கொள்வதற்கு
3. ஒரு மோட்டார் வாகனத்தின் பதிவிற்கு
4.மோட்டார் வாகன உரிமம் புதுப்பிப்பதற்கு
5.நிலத்தின் பதிவு அல்லது நிலத்தின் உரிமை மாற்றத்திற்கு
6. இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் பங்குகளை மாற்றுவதற்கு
7.கிரெடிட் கார்ட்டைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமாகின்றது என ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பின்வரும் இலகு நடவடிக்கை மூலம் வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரியப்படுத்தினார்.

பதிவு செய்திருப்பின் QR குறியீட்டை பயன்படுத்தி அல்லது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்தில் IRD பதிவு / சான்றிதழை சரிபார்க்கவும் என்ற இணைப்பினூடாக மின்னஞ்சல் அல்லது தொலைபேசிக்கு OTP இலக்கத்தைப் பெற்று TIN இலக்கத்தை பார்வையிட முடியும்.

வரி செலுத்துநர் அடையாள இலக்கம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்காவிடின் நிகழ்நிலை (Online) முறைமை மூலமாகவோ அதாவது www.ird.gov.lk அல்லது உள்நாட்டு இறைவரித் திணைகளத்தில் உரிய விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து சமர்பிப்பதன் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும். தற்போது பதிவுகளை மேற்கொள்பவர்களுக்கான TIN சான்றிதழ் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு 0212217333 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிய முடியும் எனவும் ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டது.

பிராந்திய ஆணையாளருடனான இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே.சிவகரன், திட்மிடல் பணிப்பாளர் திரு. இ. சுரேந்திரநாதன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி ஆகியோரும் உடனிருந்தார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

49 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

50 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

47 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

39 0 0