உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு தொலைக்காட்சி அன்பளிப்பு

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
45 பார்வைகள்

சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு, பிரஜைகள் சாசனம் (Citizen Charter) மற்றும் அரச சேவைகள் தொடர்பான விழிப்புணர்வுத் தகவல்களை இலகுவாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில் தொலைக்காட்சி (Television) ஒன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மனித மேம்பாட்டிற்கான பங்கேற்பு வழிகளை ஊக்குவித்தல் எனும் சிறுமானிய திட்டத்தின் கீழ், சம்மாந்துறை சமூக மட்ட அமைப்புகளின் கூட்டமைப்பினால் (SCBOC) இந்த விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று திங்கட்கிழமை (06) சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா அவர்களிடம் குறித்த தொலைக்காட்சி உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலகக் கணக்காளர் எஸ்.எல். சர்தார் மிர்ஸா, நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம். ஜெமில், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ. அகமட் சபீர் மற்றும் சம்மாந்துறை சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பொதுமக்களுக்கு அரச சேவைகள் தொடர்பான விபரங்களைத் திறம்படவும், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் எளிதாகவும் கொண்டு சேர்க்கும் இம்முயற்சிக்கு நிதியுதவி மற்றும் வழிகாட்டல்களை வழங்கிய சம்மாந்துறை சமூக மட்ட அமைப்புகளின் கூட்டமைப்பு, பொதுவான தளத்திற்கான தேடல் (Search for Common Ground) நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) ஆகிய அமைப்புகளுக்கு சம்மாந்துறை பிரதேச செயலகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

48 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

50 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

47 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

39 0 0