உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கம் செய்தமைக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் கண்டனம்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
30 பார்வைகள்

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கம் செய்தமைக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் ஜனநாயகத்தினை கேள்விக்குள்ளாக்கும் இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்கமுடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.

சம்பிரதாயங்களுக்கு அமைவாக சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் முதல்வரினால் தலைமையுரையுடன் மாநகரசபையின் நிலையற்குழுக்களின் முன்மொழிவுகள் மொழியப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் கதிர்காம பாதயாத்திரை அன்னதான குழு இணைந்து கதிர்காம காட்டுவழிப்பாதையில் முன்னெடுக்கும் அன்னதான நிகழ்வுகளுக்கான அனுமதி கோரப்பட்ட நிலையில் அதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.

இதேபோன்று மட்டக்களப்பு மாநகரசபைக்குள் முன்னெடுக்கப்படும் பல்வேறு திட்டங்கள் மற்றும் மாநகரசபையின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான தேவையான ஏற்பாடுகளுக்கு சபையின் அனுமதிகள் வழங்கப்பட்டன.

அத்துடன் மாநகரசபையின் நிதிக்குழுவினால் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கும் இதன்போது அனுமதிகள் வழங்கப்பட்டதுடன் மாநகரசபையின் செய்ற்பாடுகளை வினைத்திறன் மிக்கதாக கொண்டுசெல்வதற்கு தேவையான ஏற்பாடுகளுக்கும் அனுமதிகள் வழங்கப்பட்டன.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபைக்குள் இனங்காணப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கருத்துகள் முன்வைக்கப்பட்டதுடன் மாநகரசபையில் பல்வேறு காரசாரமான விவாதங்களும் இடம்பெற்றன.

அத்துடன் பல்வேறு நிதிகள் மூலம் மட்டக்களப்பு மாநகரசபைக்குள் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இங்கு பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதி மின்விளக்கு பொருத்துதல்,வீதிகளை புனரமைத்தல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

அண்மைக்காலமாக டெங்கின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் காண்களை தூயிமைப்படுத்துவது தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.மழைகாலம் ஆரம்பிக்கும் காலத்திற்கு முதல் இந்த பணிகளை தொடங்கவேண்டும் என்று பெருமளவான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

எனினும் நிர்வாக ரீதியாக அது தொடர்பான நடவடிக்கைகள் மந்தகதியில் உள்ளதாகவும் விரைவுபடுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்போது வவுனியா மாநகரசபையின் முதல்வர் வடமாகாண ஆளுனரால் பதிவி நீக்கம் செய்யப்பட்டமையானது மாநகரசபைக்கு வாக்களித்த மக்களின் ஜனநாயக உரிமையினை மீறும் செயற்பாடு எனவும் அதனை வன்மையா கண்டிப்பதாக மாநகரசபை உறுப்பினர் தயாளகௌரியினால் தெரிவிக்கப்பட்டது.

இதனை மட்டக்களப்பு மாநகரசபை வன்மையாக கண்டிப்பதாகவும் மக்களின் ஜனநாயக வாக்களிப்பினால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு உறுப்பினராகவும் மாநகரசபை உறுப்பினர்களினால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு முதல்வராகவும் உள்ள நிலையில் அவரை பதவி நீக்கம் செய்வதற்கு வடமாகாண ஆளுனர் முன்னெடுத்த செயற்பாடுகள் ஜனநாயக விரோத செயற்பாடு எனவும் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

35 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

55 0 0
இலங்கை செய்திகள்

சிலையை தாய் என நினைத்ததா? – மக்களை உருக்கிய இளம் காட்டு யானை.!

கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலைக்கு அருகில் இன்று (28) காலை, நெகிழ்ச்சியூட்டும் அதேவேளை அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.…

44 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

43 0 0