உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மன்னாரில் தொழிலதிபர் முஹமட் பாஹிம் மீது தாக்குதல்-பழக்கடை உரிமையாளர் கைது.

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
30 பார்வைகள்


மன்னார் நகர பேருந்து நிலைய பகுதியில் அமைந்துள்ள உணவகத்துடன் கூடிய பழ விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரான முஹமட் பாஹீம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் இன்று வியாழக்கிழமை (2)  மதியம் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளரின் சகோதரனும் மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் பழக்கடை  நடத்தி வருகின்றவருமான நபரை  மன்னார் பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த நபருடன் இணைந்து மேலும் இருவர் குறித்த தொழிலதிபரை தாக்கும் சி.சி.ரிவி வீடியோ (CCTV) காட்சி வெளியாகியுள்ளன.

தாக்குதலுக்கு உள்ளான தொழிலதிபர் முஹமட் பாஹிம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இருவருக்கும் இடையில் பழ விற்பனையில் ஏற்பட்ட நீண்ட கால தர்க்கம் காரணமாகவே குறித்த தாக்குதல் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

35 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

55 0 0
இலங்கை செய்திகள்

சிலையை தாய் என நினைத்ததா? – மக்களை உருக்கிய இளம் காட்டு யானை.!

கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலைக்கு அருகில் இன்று (28) காலை, நெகிழ்ச்சியூட்டும் அதேவேளை அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.…

44 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

43 0 0