உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஆற்றிலிருந்து ஒருவரின் சடலம் மீட்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
113 பார்வைகள்

திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள வெருகல் ஆற்றிலிருந்து, உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை (10) மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த 89 வயதுடையவர் ஆவார்.

வெருகல் ஆலய வளாகத்தில் சில நாட்களாக இவர் தங்கி நின்றதாகவும் தெரியவருகிறது.

இந்நிலையில் இவர் வெருகல் ஆற்றில் தண்ணீர் எடுப்பதற்கு சென்றபோது தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சடலத்தின் அருகிலுள்ள ஆற்றங்கரைப் பகுதியிலிந்து பாதணி, டோச்லைட் மற்றும் தண்ணீர் கேண் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.எம்.நூருல்லா சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

இதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கந்தளாய் தள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

71 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

57 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

75 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0