உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் நாடக விழா.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
21 பார்வைகள்

இன்று வளர்ந்து வருகின்ற இந்த உலகில், ஒரு வேகமான இந்த உலகில், தொழில்நுட்ப மாற்றங்கள், புரட்சிகள் நடக்கின்ற இந்த உலகத்தில் எல்லாரும் ஒரு வேகமான வாழ்க்கையில் இருக்கின்ற இந்த காலப்பகுதியில் நாங்கள் எல்லாருமே இந்த நாடகத்தின் மூலம் எங்களது உணர்வுகளையும் பல்வேறுபட்ட விடயங்களை வெளிப்படுத்துகின்ற அல்லது நாங்கள் ஓய்வாக இருக்கின்ற ஒரு நிகழ்வாக இந்த நாடக தினம் அமைகின்றது என கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் க.சுரேஸ் தெரிவித்தார்.

உலக நாடக நாளினை முன்னிட்டு இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை நடத்தும் நாடக விழா நேற்று வந்தாறுமூலையிலுள்ள பல்கலைக்கழகத்தின் நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.

நுண்கலைத் துறைத் தலைவர் திருமதி து.சத்தியஜித் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முதன்மை அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் ப.பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் க.சுரேஸ், பிரதி துணைவேந்தர் பேராசிரியர் சி.றாகல், சௌக்கிய பராமரிப்பு பீட பீடாதிபதி பேராசிரியர் தி.சதானந்தன், விவசாய பீடாதிபதி பேராசிரியர் மு.சுகிர்தரன், பட்டப்பின்படிப்பு பீடத்தின் பதில் பீடாதிபதி பேராசிரியர் ஜெ.கென்னடி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நுண்கலைத்துறையின் பண்பாட்டு இசையணியின் வரவேற்புடன் ஆரம்பமாகிய இவ்விழாவில் உலக நாடக தினத்தினை முன்னிட்டான சஞ்சிகை ஒன்றும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது மூத்த நாடகக் கலைஞர் ‘புதுவை அன்பன்’ என அழைக்கப்படும் நாகமுத்து செல்வம் அவர்களும், மட்டக்களப்பில் கடந்த மூன்று தசாப்தங்களாக நாடக அரங்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் ‘பாடினிகள்’ குழுவினரும் கௌரவிக்கப்பட்டனர்.

ஆரம்ப வைபவத்தையடுத்து முதுநிலை விரிவுரையாளர் சு.சந்திரகுமாரின் எழுத்து மற்றும் நெறிப்படுத்துகையில் உருவாக்கம்பெற்றுள்ள ‘போதைத்துரை’ எனும் நாடகமும், பேராசிரியர் சி.ஜெயசங்கர் அவர்களின் ஆற்றுப்படுத்துகையில் உருவாகியுள்ள ‘மூத்தம்மாக்களின் பேரர்கள்’ என்ற நாடகமும், முதுநிலை விரிவுரையாளர் கு.ரவிச்சந்திரனின் நெறிப்படுத்துகையில் உருவாக்கம்பெற்றுள்ள ‘எம்மைப் பிடித்த பிசாசுகள்’, ‘நல்ல மாப்பிள்ளை’, ‘மாறும் பாதை’ ஆகிய நாடகங்களும், விரிவுரையாளர் து.கௌரீஸ்வரன் அவர்களின் நெறியாள்கையில் உருவாகியுள்ள ‘பிள்ளை அழுத கண்ணீர்’ என்ற சிறுவர் நாடகமும் அளிக்கை செய்யப்பட்டது.

இந்த நிகழ்வினை கண்டுகளிப்பதற்காக பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பீடாதிபதி,
இந்த உலக நாடக நாள் விழா, குறிப்பாக 1961 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு, 1962 இல் தொடர்ச்சியாக உலகளாவிய மக்களின் கலைகள், பண்பாட்டு அம்சங்களை இணைக்கின்ற பிரதானமான மூலமாக இருந்துவருகிறது. அந்த அடிப்படையில், கிழக்கு பல்கலைக்கழகம் குறிப்பாக 1990களின் நடுப்பகுதியிலிருந்து இந்த உலக நாடக நாள் விழாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து, சமூகத்தையும் பல்கலைக்கழகத்தையும் இணைக்கின்ற ஒரு உறவுப்பாலமாகவும், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்ற ஒரு தளமாகவும் இந்த நாடக நாள் விழாவை கலை கலாச்சார பீடத்தினுடைய நுண்கலைத்துறை தொடர்ச்சியாக எடுத்து வருவதையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

ஷேக்ஸ்பியரின் கருத்துப்படி நாங்கள் எல்லாருமே நடிகர்கள். இந்த உலகத்தில் நடிகர்களாக இருக்கிறோம். அந்த வகையில், இந்த நாடக நாள் நிகழ்வுகள் பல்வேறுபட்ட செய்திகளைக் கொண்டுசெல்கின்றன.

குறிப்பாக, முதுபெரும் கலைஞர்கள் தங்களுடைய அனுபவங்களை இளைய தலைமுறைக்குக் கடத்துகின்ற ஒரு நிகழ்வாகவும் நான் இதைப் பார்க்கிறேன்.
அதுமட்டுமன்றி, இன்று வளர்ந்துவருகின்ற இந்த உலகில், தொழில்நுட்ப மாற்றங்கள், புரட்சிகள் நடக்கின்ற இந்த உலகத்தில் வந்து எல்லாரும் ஒரு வேகமான வாழ்க்கையில் இருக்கின்ற இந்த காலப்பகுதியில் நாங்கள் எல்லாருமே இந்த நாடகத்தின் மூலம் எங்களது உணர்வுகளையும் பல்வேறுபட்ட விடயங்களை வெளிப்படுத்துகின்ற அல்லது நாங்கள் ஓய்வாக இருக்கின்ற ஒரு நிகழ்வாக இந்த நாடக தினம் அமைந்திருக்கின்றது.

அந்த அடிப்படையில், இந்த நாடக நாள் நிகழ்வுகள் கல்விசார் புல ரீதியாக, குறிப்பாக கலை கலாச்சார பீடத்தைப் பொறுத்தவரையில், அவருடைய அனுபவப் பகிர்வுகள், தங்களுடைய பாடம் தொடர்பான விடயங்களைப் பகிர்கின்ற ஒரு விடயமாக இருக்கின்றது.

இந்த நிகழ்வைத் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லுகின்ற நுண்கலைத்துறையைப் பொறுத்தவரையில், அவருடைய பீடத்தினுடைய துறைத்தலைவர், மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் அனைவரையும் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி என்ற வகையில் பாராட்டுவதோடு, இந்த நிகழ்வு தொடர்ச்சியாக கொண்டுசெல்லப்பட வேண்டும்.

குறிப்பாக நான் ஒரு விடயத்தைச் சொல்ல வேண்டும். இந்தத் துறைத்தலைவி திருமதி. துஷ்யந்தி சத்தியசீலன் அவர்கள், தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் இந்த நிகழ்வுகளை இடைவிடாது, பல்வேறுபட்ட சிரமத்திற்கு, பணிகளுக்கு மத்தியில் இதனை முன்கொண்டு செல்வதையிட்டு நான் பீடாதிபதி என்ற வகையில் பெருமைப்படுகின்றேன். அவருக்கான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். குறிப்பாக இந்த நிகழ்வு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0