உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மரத்திலிருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனைப் பகுதியில் மரத்திலிருந்து கீழே விழுந்து 34 வயதுடைய பூநொச்சிமுனை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை பாலமுனைப் பகுதியில் காணி ஒன்றினுள் மரத்தின் மேல் ஏறி மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மரத்தில் இருந்து விழுந்து பலத்த காயங்களுக்குள்ளான அவரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

எனினும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவ் விபத்து மற்றும் மரணம் குறித்து காத்தான்குடி பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, காத்தான்குடி பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

உயிரிழந்த நபர் தனது வாழ்வாதாரத் தேவைக்காக மரம் ஒன்றில் ஏறியிருந்த போதே, எதிர்பாராதவிதமாக கால் வழுக்கி நிலைதடுமாறி மரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.

சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பாலமுனை மற்றும் ஆரையம்பதி பிரதேச மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0