உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

திருகோணமலையில் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
77 பார்வைகள்

நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்தும், அவற்றுக்கான விலைகளைக் குறைக்க வலியுறுத்தியும் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டமானது இன்று(11.05.2026) காலை திருகோணமலை ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.​ தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் (TSDP) ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில், கலந்துகொண்டவர்கள் பெற்றோல், எரிவாயு மற்றும் மின்கட்டண உயர்வைக் குறைக்குமாறு கோரி பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த போராட்டக்காரர்கள், கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் பொருட்களின் விலை உயர்வினால் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் வார்த்தைகளால் கூறமுடியாத துயரங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.


குறிப்பாக, நாளாந்த வருமானத்தை நம்பியிருக்கும் வறிய மக்கள் மூன்று வேளை உணவிற்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய தரப்பினருடன் ஆலோசித்து மக்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதேவேளை, எரிபொருள் விலை உயர்வு காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் பின்தங்கிய கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அத்துடன், உப்பூறல், சீனன்வெளி, நல்லூர். பாட்டாளிபுரம், சூடைக்குடா, கூனித்தீவு மற்றும் கடற்கரைச்சேனை​ ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போதிய பொதுப் போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினாலும், எரிபொருள் விலையேற்றம் காரணமாகவும் தனியார் போக்குவரத்துகளை பயன்படுத்த முடியாமல் முடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.​

பாடசாலை மாணவர்கள், நோயாளிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இதனால் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

71 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

57 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

75 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0