உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வடமராட்சி கிழக்கில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழா.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
64 பார்வைகள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் வலுவூட்டலையும் சமூகப் பங்களிப்பையும் கௌரவிக்கும் விசேட நிகழ்வு இன்றைய தினம் யாழ். வடமராட்சி கிழக்கு கலாச்சார மண்டபத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

பல்துறை சார்ந்த ஆளுமைகளின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த நிகழ்வு, பெண்களின் முன்னேற்றத்திற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

இவ் நிகழ்வானது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபாங்கன் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.

பின்னர் மங்கல விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்தைத் தொடர்ந்து, பாரம்பரிய வரவேற்பு நடனம் விருந்தினர்களை வரவேற்றது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களின் உரைகளை நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட உதவி மாவட்டச் செயலாளர் (யாழ் மாவட்ட செயலகம்) செல்வி. உ. முத்திரகணேஸ்வரன் தர்சினி அவர்கள் உரையாற்றுகையில், சமூக மாற்றத்தில் பெண்களின் வகிபாகம் குறித்து ஆழமான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக திருமதி. நிருபா நரேந்திரன் (சுகாதார வைத்திய அதிகாரி, மருதங்கேணி), திருமதி. நிரோமிலா லக்ஷன் (சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோர் கலந்துகொண்டு பெண்களின் ஆரோக்கியம் மற்றும் கல்வி சார்ந்து விழிப்புணர்வு உரைகளை வழங்கினர்.

கலை நிகழ்வுகள் மற்றும் விழிப்புணர்வு
நிகழ்வின் சிறப்பம்சமாக மகளிர் தினச் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு கலைத்திறன்கள் வெளிப்படுத்தப்பட்டன.

பின்னர் கலை நிகழ்வுகளாக குழு நடனங்கள் மற்றும் கவிதை வாசிப்புகள், பெண்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் விழிப்புணர்வு நாடகம், சிலம்பாட்ட ஆற்றுகை போன்ற வீரக் கலைகளும் இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், வாழ்வாதார உதவித் திட்டங்கள் மற்றும் வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் வகையில் விதைப் பொதிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், சமூகத்தில் சாதனை படைத்த மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பெண்களுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக மகளிர் வாழ்வாதாரச் சங்கங்களின் பிரதிநிதிகள், FAIRMED நிறுவனம் மற்றும் FRIENDS நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இறுதியாக பெண்களின் உரிமைகளையும் அவர்களின் சாதனைகளையும் கொண்டாடும் வகையில் அமைந்த இந்த விழா, நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றது.

“பெண்களால் முடியும்” என்ற நம்பிக்கையை விதைத்த இந்த நிகழ்வு, அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

76 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0