உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

துரை மற்றும் ஜெயம் விருது வழங்கல் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
59 பார்வைகள்

துரைவியின் 95 ஆவது பிறந்த தின நினைவுப் பேருரையும், துரை மற்றும் ஜெயம் விருது வழங்கல் நிகழ்வும் கொழும்பு தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் முன்னாள் அமைச்சின் செயலாளர் எம். வாமதேவன் தலைமையில் நேற்று முன்தினம்(29) நடைபெற்றது.

இந்நிகழ்வின் தொகுப்புரையையும், வரவேற்புரையையும் மேமன்கவி நிகழ்த்தினார்.

இதன்போது ந. இரவீந்திரன் எழுதிய “தமிழ்ப் பண்பாடு ஊற்றுகளும் ஓட்டங்களும்” என்ற ஆய்வு நூலுக்கும், இரா.சடகோபன் எழுதிய “சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு” என்ற ஆய்வு நூலுக்கும் ராஜன் ஹூல் – ஆங்கிலத்தில் எழுதிய “உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்” ‘(மறைகரம் வெளிப்பட்டபோது)’ என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்த என்.எம். அமீனின் மொழிபெயர்ப்பு நூலுக்கும் துரைவி விருதுகள் வழங்கப்பட்டன.

பெண் ஊடகவியலாளர் நாகபூசணி கருப்பையாவுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான “ஜெயம் விருது” வழங்கப்பட்டது.

துரைவி 95 ஆவது பிறந்த தின நினைவுப் பேருரையை ”பாலின சமத்துவத்தை நசுக்கும் இரட்டைச் சுமை பெண்ணிய உரையாடல்” என்ற தலைப்பில் எழுத்தாளர் பிரமீளா பிரதீபன் நிகழ்த்தினார்.

நிகழ்வில் நன்றியுரையை ராஜ்பிரசாத் துரை விஸ்வநாதன் வழங்கினார்.

இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர் பி. தேவராஜ் மற்றும் முன்னாள் அமைச்சின் செயலாளர் எம். வாமதேவன் ஆகியோர் விருதுகளை வழங்கி வைத்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

76 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0