உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இலஞ்சம் பெற்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
43 பார்வைகள்

அநுராதபுரம் – கெக்கிராவ பகுதியில் வாகன உரிமையாளர் ஒருவரிடம் ஐயாயிரம் ரூபாய் பணத்தினை பலவந்தமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் வலயத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலின ஹேவா பத்திரணவினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கெக்கிராவ பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகிய இருவருக்கே இவ்வாறு பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25ஆம் திகதி கெக்கிராவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது, வாகன உரிமையாளர் ஒருவரை அச்சுறுத்தி 5,000 ரூபாயை இவர்கள் பெற்றுள்ளனர்.

இது குறித்து அநுராதபுரம் வலய பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினைத் தொடர்ந்து, கடந்த 26ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவர்களது சேவை இடைநிறுத்தப்பட்டது.

தற்போது, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலின ஹேவா பத்திரணவின் ஆலோசனையின் பேரில், உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

34 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

55 0 0
இலங்கை செய்திகள்

சிலையை தாய் என நினைத்ததா? – மக்களை உருக்கிய இளம் காட்டு யானை.!

கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலைக்கு அருகில் இன்று (28) காலை, நெகிழ்ச்சியூட்டும் அதேவேளை அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.…

44 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

42 0 0