உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

எரிபொருளை பதுக்கி வைத்திருந்த பெண் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
46 பார்வைகள்

சமகிபுர, ஊவா குடாஓயா பகுதியில் தனது வீட்டில் சூட்சுமமான முறையில் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த பெண் ஒருவர் ஊவா குடாஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சமகிபுர, ஊவா குடாஓயா பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.

சமகிபுர, ஊவா குடாஓயா பகுதியில் உள்ள வீடொன்றில் எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தப் சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது 95 லீற்றர் பெற்றோல், 78 லீற்றர் டீசல் போன்ற எரிபொருள் கையிருப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த எரிபொருள் தொகுதியினை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கத்தில் அவர் சேமித்து வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் குடாஓயா பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

34 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

55 0 0
இலங்கை செய்திகள்

சிலையை தாய் என நினைத்ததா? – மக்களை உருக்கிய இளம் காட்டு யானை.!

கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலைக்கு அருகில் இன்று (28) காலை, நெகிழ்ச்சியூட்டும் அதேவேளை அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.…

44 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

42 0 0