உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
39 பார்வைகள்

புதிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவர் அமித் வீரசிங்க, கண்டி பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் ஒருவரைத் தாக்கியமை தொடர்பான முறைப்பாடு குறித்து விசாரணை நடத்துவதற்காக, கண்டி பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துக்கு அமித் வீரசிங்க அழைக்கப்பட்டிருந்தார். இதன்போது, பொலிஸ் நிலையத்துக்குள் அவர் மிகவும் அமைதியற்ற முறையிலும், கலாட்டாவிலும் ஈடுபட்டார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமித் வீரசிங்கவுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ள பெண், அவரது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி பெண்ணைத் தாக்கியமை தொடர்பாகவே ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மத்திய மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுதத் மாசிங்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கண்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள அமித் வீரசிங்க மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

34 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

55 0 0
இலங்கை செய்திகள்

சிலையை தாய் என நினைத்ததா? – மக்களை உருக்கிய இளம் காட்டு யானை.!

கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலைக்கு அருகில் இன்று (28) காலை, நெகிழ்ச்சியூட்டும் அதேவேளை அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.…

44 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

42 0 0