இன்றைய ராசி பலன்கள் – 29.03.2026
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் மனதில் வைத்திருந்த பாரத்தை கீழே இறக்கி வைப்பீர்கள். உங்களுடைய தவறை உணருவீர்கள். செய்த தவறுக்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்வீர்கள். இந்த நாள் இனிய நாளாக அமையும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். வேலையும் வியாபாரமும் எப்போதும் போல சுமூகமாக நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தடைகள் தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். சொந்தபந்தங்களோடு பேசும் போது முன் கோபம் வேண்டாம். நிறைய பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். வெளியூர் பயணங்கள் செய்ய வேண்டாம். இந்த நாளில் இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். இரட்டிப்பு சந்தோஷம் கிடைக்கப் போகிறது. குடும்பத்தில் சந்தோஷம், வேலை, வியாபாரத்தில் சந்தோஷம், என்று எல்லா வகையிலும் மகிழ்ச்சி உங்களுடன் நிறைவாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். மன நிம்மதி கிடைக்கும் நாள் இன்று.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று தேவை இல்லாத சின்ன மன பயம் பதட்டம் இருக்கும். கவலைப்படாதீர்கள். இறைவழிபாடு செய்யுங்கள். உங்களுக்கு எந்த கெடுதலும் நடக்காது. இறைவனின் பரிபூரண ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கிறது. தேவையில்லாமல் மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். எல்லாம் கடந்து போகும் என்று இந்த நாளை சந்தோஷமாக நகர்த்தி விடுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன கவலை கொஞ்சம் இருக்கும். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை இருக்கும். பிள்ளைகளுடைய எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து கொஞ்சம் கஷ்டப்பட கூடிய சூழ்நிலை வரும். இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். எதிர்காலம் கடவுள் கையில் உள்ளது. இன்றைக்கான வேலையை திறமையாக செய்து முடித்து விடுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். நல்லதே நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக சிந்திப்பீர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். தேவையற்ற பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். வருமானம் பெருகும். சேமிப்பு உயரும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள் இன்று.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஆர்வம் அதிகரிக்கும். பொது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். வெளியூர் பிரயாணங்கள் நல்லபடியாக நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக அமையும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் இரட்டிப்பு வேலை இருந்தாலும் மனதில் சந்தோஷம் இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். எல்லா விஷயத்திற்கும் இலாப நஷ்ட கணக்கு பார்த்துக் கொண்டு பேசிக்கொண்டு இருப்பீர்கள். ஆனால் வேலையில் கொஞ்சம் மந்தமான சூழ்நிலை உண்டாகும். உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதிகமான வெயில் சமயத்தில் வெளியே செல்ல வேண்டாம். முதியவர்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவாக நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். வாக்குவாதம், சண்டை, பிரச்சனை எது வந்தாலும் சரி, உங்களுடைய பேச்சுக்கு நாலு பேர் ஆதரவு தெரிவிப்பார்கள். பிரச்சினையில் இருந்து விடுபட, நாலு பேருடைய உதவியும் உங்களுக்கு கிடைக்கும். பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மன தைரியம் உங்களுக்கு தேவை. இந்த நாள் சின்ன சின்ன சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சின்னச் சின்ன எதிர்ப்புகள் வரும். வாக்குவாதம் ஏற்படும். எதிரி தொல்லை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இடையே வாக்குவாதம் வேண்டாம். நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். அவசர முடிவுகளை எடுக்க கூடாது. இருக்கும் வேலையை தக்கவைத்துக் கொள்வது நல்லது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் பிரச்சினைகள் வரும். வீண்விரய செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நிதி பற்றாக்குறையும் இருக்கும். ஆனால் சமாளித்து விடலாம். கவலை இல்லை. இறைவழிபாடு செய்யுங்கள். மனதிற்கு அமைதி தரும்.