உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வவுனியாவில் மக்கள் காணிகள் கையகப்படுத்தல் குற்றச்சாட்டு – எம்.பி. சத்தியலிங்கம் ஆய்வு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பழையவாடி புளியங்குளம் பகுதியில், வனவள திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் இன்று (25.03.2026) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


குறித்த பகுதியில் வசிக்கும் மக்களுடன் குறைகேள் கலந்துரையாடலில் ஈடுபட்ட அவர், வனவள திணைக்களத்தினரால் எல்லைக்கற்கள் நாட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் காணிகளை நேரில் பார்வையிட்டார்.மேலும், இந்த விடயம் தொடர்பாக மக்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர் (அரசாங்க அதிபர்), வனவள திணைக்களம் மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, மக்கள் காணிகளை மீளப் பெறுவதற்கான தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

51 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

50 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

47 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

39 0 0