உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 25.03.2026

ராசி பலன்கள் 7 மாதங்கள் முன்
50 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மதிப்பும் மரியாதையும் உயரக்கூடிய நாளாக இருக்கும். சுகமான அனுபவங்கள் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பாராட்டு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வு நோக்கி பயணம் செய்வீர்கள். தகுதிக்கு ஏற்ற சம்பளத்தை பெறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. உறவுகளால் ஏற்பட்ட மனக்கசப்பு விலகும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்துங்கள். உங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். நீங்கள் செய்யும் வேலையிலும், தேவையான அளவு முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். கடன் சுமை குறையும். தேவைக்கேற்ப கையில் பணம் இருக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திக்க கூடிய வாய்ப்புகள் உள்ளது. சுப செலவுகள் ஏற்படும். வண்டி வாகனம் ஓட்டும் போது மட்டும் கவனமாக இருங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு செயல்படுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளுடைய ஆதரவை பெறுவீர்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் விலகும். மன நிம்மதி கிடைக்கும். நேரத்தை மட்டும் வீணடிக்காதீர்கள். தேவையில்லாத விஷயத்திற்கு கைபேசி பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். காதல் வெளிப்படும். காதல் கைகூடிவரும். திருமணம் வரை செல்லும். நீண்ட நாள் மனதில் மறைத்து வைத்திருந்த விஷயங்களை வெளிப்படையாக பேசுவீர்கள். மன நிம்மதி கிடைக்கும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும். இறைவனின் அருளால் இந்த நாள் இனிய நாளாக அமையும். வேலையும் வியாபாரமும் கைகூடி வரும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நினைத்த காரியங்கள் எல்லாம் நல்லபடியாக முடியும். ஆசைகள் நிறைவேறும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்ற பாதையை நோக்கி பயணம் செய்வீர்கள், பிள்ளைகளால் மனமகிழ்ச்சி உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சேமிப்பு உயரும் நாள் இன்று.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று திறமையாக செயல்படுவீர்கள். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களை பார்க்கும் போதே ஆசையாக இருக்கும், இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று. அழகான தோற்றம், அழகான பேச்சு என்று நீங்கள் அனைவரையும் வசீகரிக்க போகிறீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். புது அனுபவங்கள் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நலமான சுகமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். எதிரி தொல்லை நீங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புது ஒப்பந்தங்கள் போடலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். கணவன் மனைவி மட்டும் வாக்குவாதம் செய்யாதீர்கள். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுப்பது குடும்ப நிம்மதி தரும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். டென்ஷன் குறையும். நீண்ட நாள் பிரச்சினைகள் விலகும். குழப்பத்திற்கான தெளிவு பிறக்கும். வெளிப்படையாக பேசுவீர்கள். சந்தேகத்திற்கு உண்டான விடையை தெரிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். சுப செலவுகள் ஏற்படும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகள் செய்யலாம். சுபகாரிய பேச்சு வார்த்தையை வீட்டில் தொடங்கலாம். நல்லதே நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வண்டி வாகனம் ஓட்டும்போது மட்டும் கவனம் இருக்கட்டும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று பாசிட்டிவ் ஆக இருப்பீர்கள். உங்களுடைய பேச்சு நடவடிக்கை எல்லாமே, ஒரு நல்ல அதிர்வலைகளை கொடுக்கும். சுற்றி இருப்பவர்கள் உங்களை நன்றாக புரிந்து கொள்வார்கள். உங்களோடு சேர்ந்தால், அவர்களுக்கும் நன்மை நடக்கும் என்ற அளவுக்கு நம்பிக்கையை கொண்டு வந்து விடுவீர்கள். பேச்சு, சிந்தனை, செயல்பாடு அனைத்தும் உயர்ந்த இடத்தில் இருக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

63 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0