உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பெண்ணின் சடலத்தைத் தோண்டி நகைகளைத் திருடுவதற்கு முயற்சி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
25 பார்வைகள்

மொரட்டுவை, லக்ஷபதிய பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலத்திலிருந்த நகைகளைத் திருடும் நோக்கில், மர்ம நபர்கள் மயானத்திலுள்ள சவப்பெட்டியைத் தோண்டியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக லக்ஷபதிய பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த தனது தாயாருக்கு ‘இமிடேஷன்’ ரக மாலை, காதணி மற்றும் வளையல்களை அணிவித்து உடல் அடக்கம் செய்யப்பட்டது என்று மகள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தாயார் உயிரிழந்து ஏழாம் நாள் நினைவாக மயானத்தில் மெழுகுவர்த்தி ஏந்துவதற்காகச் சென்றபோது, இருவர் சவப்பெட்டியைத் தோண்டிக் கொண்டிருப்பதை அவர் கண்டுள்ளார். இதனைக் கண்டதும் அங்கிருந்த இருவர் தப்பியோடியுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் உடல் மிகவும் விலையுயர்ந்த சவப்பெட்டியிலேயே அடக்கம் செய்யப்பட்டிருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பாக மயானத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தரைப் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

தப்பியோடிய இரு சந்தேக நபர்களும் மொரட்டுவை மாநகர சபையின் ஊழியர்களாக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0